இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகிறார்!

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகிறார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய சந்திப்பிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் சந்தோஷ் ஜா, கூறியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த போது, ​​பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பை விடுத்திருந்தார். அதன் பிரகாரம் மோடியின் இலங்கை பயணம் இடம்பெற உள்ளது.

பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.