மேக்கப் ஆர்ட்டிஸ்ட் லங்கா கிளப்பினால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு!

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் லங்கா கிளப் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் லங்கா கிளப் தலைவி அனுஷா குமரேசன் கடந்தகால, எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

குறிப்பாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட் லங்கா கிளப், படித்துவிட்டு வேலையற்றிருக்கும்யுவதிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழிலை பெற்றுக்கொடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதில் பயிற்சியை முடித்த யுவதிகள் பலர் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி சாதனையும் படைத்துள்ளனர்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் லங்கா கிளப்பின் செயலாளர் வித்யா நிரஞ்சனும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் லங்கா கிளப்பின் பொருளாளர் சிதம்பரம் அஜித்தும் கலந்து கொண்டதுடன் பயிற்சிகளை பெற்றுவரும் யுவதிகளும் சாதனைகள் படைத்த ஒப்பனை கலைஞர்களும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.