எலோன் மஸ்க்கின் Starlink இலங்கையில் முன்கூட்டிய ஆர்டர்களை பெறும் பணி ஆரம்பம்!
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையம் தற்போது இலங்கையர்களிடமிருந்து முன்கூட்டிய ஆர்டர்களை பெற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் முழுமையாகத் திரும்பப் பெறக்கூடிய (ரீபண்டபல்) 9 அமெரிக்க டொலர் பெறுமதியான டெபாசிட்டிற்கு ஸ்டார்லிங்க் ஐ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் அதன் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஸ்டார்லிங்க் ஆனது 2024 இல் தனது சேவையை இலங்கையில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளது .
ஒவ்வொரு கவரேஜ் பகுதியிலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை நிறைவேற்றப்படும்.
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி சமீபத்திய இந்தோனேசியா விஜயத்தின் போது, இலங்கையுடன் உலகளாவிய ஸ்டார்லிங்க் வலையமைப்பை ஒருங்கிணைத்தல் தொடர்பாக மஸ்க் உடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவிக்கிறது .
குறிப்பாக கொழும்பிற்கு வெளியே உள்ள இணைய இணைப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே ஸ்டார்லிங்கை இலங்கைக்கு கொண்டு வருவதன் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.