இம்மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 100,000ஐக் கடக்கும்!
இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 100,000ஐக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும், மே மாதத்தில் 120,934 தொடக்கம் 131,112 வரையான இலக்குக்கு பின்னே நிற்கிறது.
இம்மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் அதாவது முதலாம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் 79, 431 பேர் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்தாண்டு மே மாதத்தில் 83,309 பேர் வருகை தந்திருந்தனர்.
கடந்த மாதங்களிலிருந்த நாளொன்றுக்கான சராசரி 5,000இலிருந்து 3,782 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏப்ரலிலிருந்து கோடை காலம் வரையில் நெருக்கடியற்ற காலமாகையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது குறைவாகவே இருக்கும். எவ்வாறெனினும் விசாப் பிரச்சினையும் இம்மாத வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்தே அதிகபட்சமாக 26 சதவீதமானோர் வருகை தந்த நிலையில், இரண்டாமிடத்தில் மாலைதீவுகளிலிருந்து 11 சதவீதமானோர் வருகை தந்துள்ளனர்.