வெடுக்குநாறி மலையில் - கைதானவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 

குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா - நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள சந்தியில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றது.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே, கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் தமக்கான நீதி வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

கடந்த 12 ஆம் திகதி தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நீடித்து வருகின்றது.

கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஆலய பூசகர், தமிழ்ச்செல்வன், கிந்துயன்,  தவபாலசிங்கம்,  விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் என்று நாடாளுமன்றி உறுப்பினர் கஜேந்திரன்  தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில செல்வராசா கஜேந்திரன் விடுத்துள்ள கோரிக்கை மற்றும் கைது செய்யப்பட்ட விநாயக மூர்த்தியின் தாயாரின் கண்ணீருடன் கூறிய உண்மை கதை.