குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை மற்றும் யோசனை!

கேகாலை மற்றும் சித்தாவகபுர பொலிஸ் பிரிவுகளில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை கேகாலை பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

அண்மைக் காலங்களாக சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை அடையாளம் காண அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கோரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை அடையாளம் காண 28 அளவுகோல்கள் பயன்படுத்தப்படும் என்றும், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்க அச்சிடப்பட்ட படிவம் பயன்படுத்தப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபதி ரொஷான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.