பிரித்தானிய தீவு விடுதியில் 56 தமிழர்களுக்கு நேர்ந்த அவலம்!

பிரித்தானிய தீவு விடுதியில் 56 தமிழர்களுக்கு நேர்ந்த அவலம்!

பிரித்தானிய - அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவானது அகதி தஞ்சம் கோரிய இலங்கை தமிழர்களுக்கு, நரகத்தைக் காட்டிய ஒரு இந்தியப் பெருங்கடல் பகுதி என, சர்வதேச அமைப்புக்கள் பலவற்றாலும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட குறித்த தீவில், அகதி தஞ்சம் கோரிய மக்கள் மாதக்கணக்கில் சிக்கித் தவித்தாக தமிழ் ஊடகம் ஒன்று சற்று முன்னர் செய்திவௌியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிலைமை காரணமாக தஞ்சம் கோரி கனடாவை நோக்கி பயணித்த இலங்கை தமிழ் ஏதிலிககளின் படகு இடையில் பழுதடைந்ததன் காரணமாக இவர்கள்  டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக டியாகோ கார்சியாவில் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொண்ட துயரம் தொடர்பில் ஊடக  நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இலங்கை தமிழரான சுப்பையா அரவிந்த் தமது கடந்த நினைவுகளை  பகிர்ந்துக்கொண்டார்.

மேலும், புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக குறித்த தீவில் மாட்டிக்கொண்ட தமது குழுவுக்கு , காலம் செல்ல செல்ல அங்குள்ள அடிப்படை விடயங்கள் புரிய ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.