புயலின் எதிரொலி: உச்சம் தொட்ட மீன் விலை!

புயலின் எதிரொலி: உச்சம் தொட்ட மீன் விலை!

அண்மைக் காலமாக இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலையில் பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு விலையுயர்வு ஏற்பட்டுள்ளதாக மீன்வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், கடந்த நாட்களை விட இன்று மீன்களின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்போது காலநிலை சீராகிவரும் நிலையில் இந்த விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மரக்கறி விலைகளில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை பிரதான சந்தையிலுள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், பண்டிகை காலம் என்பதால் இந்த விலை மாற்றம் மேலும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.