லிட்ரோ எரிவாயுவின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் (Muditha Pieris) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாயால் அதிகரித்து புதிய விலை 3,565 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது

5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,431 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேவேளை, 2.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 668 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.