சீனியின் அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு!

வெள்ளை மற்றும் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (03)  முதல் அமுலாகும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

சீனியின் அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு!

 
இதற்கமைய பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275  ரூபாயாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 295  ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 330  ரூபாயாகும்.

பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 350  ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.