பெரிய வெங்காயத்துக்கு இந்தியாவில் ஏற்பட்ட நிலையால் இலங்கையில் தாக்கம்!

பெரிய வெங்காயத்தை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பெரிய வெங்காயத்துக்கு இந்தியாவில் ஏற்பட்ட நிலையால் இலங்கையில் தாக்கம்!

பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது சந்தையில் 1 கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தநிலையில், இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.