சர்வதேச ரீதியில் எரிபொருள்களின் வ​ிலை உயர காரணம்?

சர்வதேச ரீதியில் எரிபொருள்களின் வ​ிலை உயர காரணம்?

 அதிகரித்து வரும் காசா மோதல் பிராந்திய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்ற புதிய அச்சம் காரணமாக எண்ணெய் விலைநேற்று(26) 1% உயர்ந்தது.

 அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பின் சாத்திய கூறுகள் காரணமாக உலகப் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் தேவை உயர்த்தியபோது கடந்த வெள்ளிக்கிழமை முதல் துரிதமாக உயா்ததாக   ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

0910 GMT அளவில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 79 சென்ட்கள் அல்லது 1% உயர்ந்து.இதன்படி ஒரு  பீப்பாய் மசகெண்ணை விலை $79.81 ஆக இருந்தது, அதே நேரத்தில் அமெரிக்க மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $75.63, 80 சென்ட்கள் அல்லது 1.07% ஆக இருந்தது.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்று வரும் எல்லை மோதல்களின் ஒரு கட்டமாக  ஹெஸ்பொல்லா (Hezbollah) கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்குள் நூற்றுக்கணக்கான எரிகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்ளை ஏவியது, 

இஸ்ரேலின் இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை முறியடிக்க சுமார் 100 ஜெட் விமானங்களுடன் லெபனானைத் தாக்கியதாக அறிவித்துள்ளது

இந்த நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், வட்டி விகிதக் குறைப்பு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு எண்ணெய் அளவுகோல்களும் 2% க்கு மேல் அதிகரித்தன.

"பணவியல் கொள்கையை தளர்த்துவதற்கான வாய்ப்பு பொருட்களின் பெறுமதியை அதிகபட்சமாக   உயர்த்தியது" என்று ANZ ஆய்வாளர்கள் ஒரு குறிப்பில் தெரிவித்தனர்.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (OPEC) மற்றும் அதன் நட்பு நாடுகள் அல்லது OPEC+ ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர்,

இது இந்த ஆண்டின் இறுதியில் உற்பத்தியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பிலிப் நோவாவின் மூத்த சந்தை ஆய்வாளர் பிரியங்கா சச்தேவா கூறினார்.