தென்னாப்பிரிக்காவில் இலங்கையின் தேயிலை மற்றும் சுற்றுலாத்துறை விரிவாக்கம்!
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள கொரிய கலாச்சார மையத்தில் இடம்பெற்ற உலக உணவு சார்ந்த நிகழ்வில் இலங்கையின் தேயிலை மற்றும் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில், ஈரான், நேபாளம், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, இலங்கை மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் உணவு மற்றும் கலாசாரம் தொடர்பான விடயங்கள் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கையின் தேயிலை, சுற்றுலாத்துறை மற்றும் உணவுகள் என்பவற்றை மேம்படுத்தும் வகையிலான குறுந்திரைப்படம் ஒன்றும் அங்கு ஒளிபரப்பப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட சுமார் 400 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.