ஹவாய் காட்டுத்தீயால் உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக அதிகரிப்பு!
ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான Maui யில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான Maui யில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
குறித்த தீவின் ஆளுநர் இதனை மிகப் பெரிய இயற்கை பேரழிவு என குறிப்பிட்டுள்ளார்.
Maui தீவில் உள்ள லஹைனா நகரில் இருந்து 80 வீதமான சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளதுடன் ஆயிரத்து 700 கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாரிய தீப்பரவல் காரணமாக பலர் கடலில் குதித்து நீரில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
டோரா புயல் காரணமாக காட்டுத் தீ வேகமாக பரவியதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
லஹைனா பகுதியில் 80 சதவீதமான காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் சில பகுதிகளில் தீ அணைக்கப்படவில்லை என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் Maui தீவில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 11 ஆயிரம் மக்கள் மின்சாரமின்றி உள்ளனர்.