ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் வியாழக்கிழமை (22) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை இரத்து செய்தது.
மேலும், தற்போதைய வெளிநாட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்கவோ கட்டாயப்படுத்துகிறது.
அதேநேரத்தில், ஏனைய கல்லூரிகளுக்கும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவதாக உத்தரவு அச்சுறுத்துகிறது.
2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை நிறுத்துமாறு உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உத்தரவிட்டதாகத் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் பழிவாங்கும் செயலாகும் என்றும் ஹார்வர்ட் கூறியது.
ஹார்வர்டில் உள்ள சில வெளிநாட்டு மாணவர் விசா வைத்திருப்பவர்கள் குறித்து கிறிஸ்டி நோயம் கோரிய தகவல்களை வழங்க ஹார்வர்ட் மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, ஹார்வர்ட் 2024-2025 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்களைச் சேர்த்தது, இது அதன் மொத்த சேர்க்கையில் 27% ஆகும்.
2022 ஆம் ஆண்டில், சீன நாட்டினர் 1,016 பேர் வெளிநாட்டு மாணவர்களாக இருந்ததாக பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதைத் தொடர்ந்து கனடா, இந்தியா, தென் கொரியா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்தனர்.
இது தொடர்பான கருத்துக்கான கோரிக்கைக்கு வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.