தாழமுக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

தாழமுக்கம்:
எதிர்வரும் 27ஆம் திகதியளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியம் மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஒரு தாழமுக்க பகுதியானது (Low Pressure Area) உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது அதனை அடுத்து வரும் 02 நாட்களில் மேலும் வலுவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை கிழக்கு-மத்திய அராபிக் கடற் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கப் பகுதியானது (Low Pressure Area) உருவாகி உள்ளது.
இது அடுத்த வரும் 36 மணித்தியாலத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, தாழமுக்கமாக (Depression) வலுவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.