3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

3,147 தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்!

இலங்கையின் தாதியர் சேவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நாளை (24) அதிகாரப்பூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வு நாளை காலை 9:30 மணிக்கு கொழும்பு, அலரி மாளிகையின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று அமைச்சு இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலதிகமாக, தாதியர் சேவையின் சிறப்பு தரத்தில் பணியாற்றும் 79 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்கவுள்ளார்.

அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உட்பட பல மூத்த அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.