இரத்தினபுரியில் பாரிய விபத்து - 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
இரத்தினபுரி பெல்மடுல்ல வீதியில் லெல்லுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாரிய காயங்களுடன் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி பெல்மடுல்ல வீதியில் லெல்லுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாரிய காயங்களுடன் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றின் மீது இரத்தினபுரியில் இருந்து பெல்மடுல்ல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று
மோதியதில் இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு பிள்ளை உட்பட மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.