சட்ட விரோதமாக செயற்படும் கூகுள் - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்ட விரோதமாக செயற்படும் கூகுள் - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இணையத் தேடலில், கூகுள் நிறுவனம் 90 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்க, சட்டவிரோதமாக செயற்பட்டு வருவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு ஓராண்டுக்கும் மேலாக, நிலுவையில் இருந்தது. 

இந்நிலையில், தற்போது அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளதுடன் அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா இதற்கு தீர்ப்பு அளித்தத்தில், "கூகுள் நிறுவனம், தேடல் சேவையில் தேடுபொறியில் 90 சதவீதத்தையும், தொலைபேசிகளில் 94.9 சதவீதத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளது" என தீர்ப்பளித்த நிலையில், கூகுள் இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.