ட்ரம்ப் கொலை முயற்சியின் எதிரொலி : பதவி விலகிய முக்கியஸ்தர்!

ட்ரம்ப் கொலை முயற்சியின் எதிரொலி : பதவி விலகிய முக்கியஸ்தர்!

அமெரிக்க இரகசிய சேவையின் பிரதானி கிம் சீட்லே பதவி விலகல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து அவர் இவ்வாறு பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் வேட்பாளர்கள் பதவி விலகுமாறு கிம்மை கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பணிப்பாளர்
பென்சில்வேனியாவில் வைத்து ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைகளின் போது கிம் உரிய பதில்களை வழங்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் என்ற அடிப்படையில், இந்த படுகொலை முயற்சியின் போதான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கிம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல தசாப்தங்களாக கிம், அரச சேவையில் வழங்கிய பங்களிப்பிற்காக நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.