நியூயோர்க்கில் போர் எதிர்ப்பு பேரணியொன்று ஆரம்பம்!
யேமன் மீதான அமெரிக்க மற்றும் பிரித்தானிய படையினரின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் போர் எதிர்ப்பு பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் யேமன் மீது அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரி குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யேமன் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக கூட வேண்டுமென ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கடந்த நேற்று முன்தினம் (10) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 11 நாடுகள் மாத்திரம் அதற்கு சார்பாக வாக்களித்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இதனை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்திருந்ததுடன், அதில் இருந்து பாதுகாப்பு வழங்க பதில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிவித்து அந்த நாடுகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.