அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கெமராக்கள்!
அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.