கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையானது கொட்டாஞ்சேனை பொலிஸாரின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதன்படி, முதலில் உயிரிழந்த சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தலைவரிடமிருந்தும் சிறுமியின் தாயாரிடமிருந்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், சாட்சியங்களைப் பதிவு செய்வதை 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்த பதில் நீதவான், அன்றைய தினம் சிறுமியின் தாயாரிடமிருந்து மேலதின சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளார்.