தொகை மதிப்பு நடத்தப்படும் நேரத்தில் விவசாயிகளுக்காக புதிய கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படுகிறது? 

தொகை மதிப்பு நடத்தப்படும் நேரத்தில் விவசாயிகளுக்காக புதிய கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படுகிறது? 

குடிசன, வீட்டு வசதிகள், தொகை மதிப்பு நடத்தப்படும் நேரத்தில் விவசாயிகளுக்காக புதிய கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படுகிறது?  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

2024/2025 இல் மீண்டும் விவசாயிகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறினாலும், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நாடு முழுவதும் கணக்கெடுப்பை நடத்தி வரும் நேரத்தில், இதனுடன் இணைந்து விவசாயிகள் தொடர்பான கணக்கெடுப்பு ஏன் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்ற சிக்கல் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(20)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து தற்போதைய கணக்கெடுப்புடன் இணைந்ததாக இந்தக் கணக்கெடுப்பையும் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.