பராட்டே சட்ட திருத்தம் தொடர்பான வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏன்?
2024 பெப்ரவரி 26 ஆம் திகதி பராட்டே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.
இது தொடர்பான வர்த்தமானி கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட போதிலும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதனால், இன்றைய பத்திரிகைகளில் கூட பராட்டே சட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டுள்ளது.
இது அரச நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையை காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதை ஏன் செயல்படுத்தவில்லை என்பதில் பிரச்சினை எழுகிறது.
பராட்டே சட்டம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தால் அதனை அவசர விடயமாக எடுத்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(20) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.