அமெரிக்க டொலருக்குப் பதிலாக இந்திய நாணயத்தைப் பயன்படுத்த ஒப்பந்தம்!
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஹைதராபாத் இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையில் சில உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த ஒப்பந்தங்களில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்க டொலருக்குப் பதிலாக இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பெரும் செல்வந்தரான கௌதம் அதானியையும் சந்தித்துள்ளார்.
கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி, 500 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக கௌதம் அதானி, ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலைiயும் சந்தித்து ஜனாதிபதி முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நேற்றையதினம் ஜனாதிபதி ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.