சீனாவிற்கு செலுத்திய கட்டணத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் முயற்சி!
கரிம உரங்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் வெளியுறவு அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
கரிம உரங்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் வெளியுறவு அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து சீன அரசாங்கத்துடனும் சீன நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச தெரிவித்துள்ளார்.
இந்தப்பிரச்சினை தொடர்பான கணக்காய்வு அறிக்கை சமர் ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கரிம உரம் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்தும் ஆராயவுள்ளதாக சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மாதிரி பரிசோதனை தோல்வியடைந்த நிலையில், இலங்கையால்; நிராகரிக்கப்பட்ட சீனாவின் கரிம உர நிறுவனத்திற்கு 6.2 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதனிடையே, இந்தியாவில் இருந்து நனோ உரம் கொள்முதல் செய்வது தொடர்பாக மற்றொரு கணக்காய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
இதற்கும் அதிக விலை கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் கொள்முதல் குறித்த அறிக்கையை விவசாய அமைச்சகம் இறுதி செய்து வரும் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.