அடுத்த காவல்துறை மா அதிபர் தெரிவு - தொடரும் முரண்பாடு!
காவல்துறையின் உயர் பதவிக்கான நியமனம் குறித்த முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
காவல்துறையின் உயர் பதவிக்கான நியமனம் குறித்த முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் அடுத்த காவல்துறை மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளார்.
காவல்துறை அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு நீடிப்புகளின் பின்னர் கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது.
தற்போதைய மூப்புப் பட்டியலின்படி, நிர்வாகத்துறையின் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர் நிலந்த ஜயவர்தன, வடமேல் மாகாண சிரேஸ்;ட பிரதி காவல்துறை மா அதிபர் எல்.எஸ்.பதிநாயக்க, சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப்பிரிவுக்கான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர்; பிரியந்த வீரசூரிய மற்றும் சபரகமுவ மாகாண பிரதி காவல்துறை அதிபர் பிபிஎஸ்எம் தர்மரத்ன ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இதில் மூன்று பெயர்கள் மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் புதிய காவல்துறை மா அதிபரை பெயரிடுவதில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள ஒரு வார கால தாமதம், குற்றம் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்குவது உள்ளிட்ட நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.