கிழக்கில் மூவின மக்கள் வாழ்ந்தாலும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்துள்ளன - எஸ்.வியாழேந்திரன்.

கிழக்கில் மூவின மக்களும் வாழ்ந்த போதிலும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அவைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் உள்ளது. 

கிழக்கில் மூவின மக்கள் வாழ்ந்தாலும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்துள்ளன - எஸ்.வியாழேந்திரன்.

கிழக்கில் மூவின மக்களும் வாழ்ந்த போதிலும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

அவைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் உள்ளது. 

நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்குச் சார்பாகவே செயற்பட்டு வருகின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி அபிவிருத்தி உப கருத்திட்டத்தின் கீழ் 33 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச சபைச் செயலாளர் வி.கௌரிபாலன் தலைமையில் வெல்லாவெளியில் இன்று (29) இடம்பெற்றது. 

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துவிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் 

மக்களுடைய உரிமை சார்ந்த விடயத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றோம். எமது மாகாணத்தைப் பொறுத்தளவிற்கு, ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதன் ஊடாகவே எங்கள் இனத்தினுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற தீரக்கமாக கொள்கையுடன் பயணிக்கின்றோம்.  

எனவே, உரிமை சார்ந்த விடயத்தில் எவ்வளவு தூர நோக்குடன் விவேகமாக பயணிக்கிறோமோ, அதற்குச் சமாந்தரமாக அபிவிருத்தி சார்ந்த விடயத்திலும்  நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களும் உரிமைக்குச் சமாந்தரமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்களே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல திட்டமிட்ட குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. எனவேதான் எமது மக்களுடைய உரிமை சார்ந்த விடயங்களுக்குச் சமாந்தரமாக அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எம்மிடம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுபோல் கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல விடயங்களிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 58.9 வீதமாகவிருந்த தமிழர்கள் தற்போது 38.6 வீதத்திற்கு குறைந்திருக்கின்றார்கள். இதற்கு காரணம் கடந்த காலத்திலே மேற்கொண்டிருந்த திட்டமிட்ட குடியேற்றங்களாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.