பிரபாகரனின் மரபணு விடயம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை - மைத்திரிபால சிறிசேன!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு விடயம் தொடர்பில் தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள அவர், அங்கு இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது இறுதி இரண்டு வாரங்கள் மாத்திரமே தாம் பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் தாம், அந்த காலப்பகுதியிலும் சரி, தற்போதும் சரி எவ்வித விடயங்களையும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில், அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினரே, பிரதான பங்கினை வகித்திருந்தனர்.

தாம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பினும், அவர்களே யுத்தத்தை வழிநடத்தியிருந்தனர்.

முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் வெளிநாடு சென்றிருந்த போது, இறுதி இரண்டு வாரங்களில் நான் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தேன்.

எனினும், தமக்கு அது தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் அறிக்கையிட்டிருக்கவில்லை.

எனவே, அது தொடர்பான தகவல்களை தம்மால் வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.