உடனடியாக மதுபானங்களின் விலையை குறையுங்கள் – சபையில் கோரிக்கை

நான் ஜனாதிபதியிடமும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். தயவு செய்து மதுபானங்களின் விலையை குறையுங்கள் என இராஜாங்க அமைச்சரான டயனா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

உடனடியாக மதுபானங்களின் விலையை குறையுங்கள் – சபையில் கோரிக்கை

நான் ஜனாதிபதியிடமும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். தயவு செய்து மதுபானங்களின் விலையை குறையுங்கள் என இராஜாங்க அமைச்சரான டயனா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நாடு தற்போதை வழிமுறையில் செல்லுமாயின் எப்போதும் முன்னேறப்போவதில்லை. உலக நாடுகள் பலவற்றில் நூற்றுக்கு எழுபது சதவீத வருமானம் இரவு வர்த்தக செயற்பாடுகள் மூலமே கிடைக்கின்றது. ஆ

எனவே, இலங்கையை 24 மணிநேரமும் இயங்க வைக்கும் ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

இப்போது நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வருகை வளர்ச்சியடைந்துள்ளது. இவற்றை அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாட்டுக்குள் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும், சிகிரியாவுக்கும், மதத் தலங்களில் வழிபடவும் விரும்புவதில்லை. 

அவர்கள் வருவது பொழுதுபோக்கிற்காக. எனவே அவர்களுக்கு சிறந்தது இரவு களியாட்டங்களே.

தற்போது இரவு 10 மணிக்கு முன்னவே மதுபானசாலைகளும், உணவு விடுதிகளும் மூடப்படுகின்றன. 

இவ்வாறு செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது. ஏன் எமக்கு நாட்டை இந்தியாவின் கோவா போன்று மாற்றமுடியவில்லை. 
இதற்கு இலங்கை மக்கள் மத்தியில் உள்ள சோர்வு தன்மையே காரணம்.

நான் ஜனாதிபதியிடம் கூருவது 1800 களில் செயற்பட்டது போன்று தற்போது செயற்பட முடியாது. அப்போது இருந்த நடைமுறைகள் இப்போதைய நடைமுறைக்கு ஒத்துவராது.

ஏன் கடற்கரைகளில் நடத்தப்படும் இசைநிகழ்ச்சிகளை 1 மணிக்கு நிறுத்த வேண்டும். இசையால் மீன்களுக்கு எந்தவிட தொந்தரவும் ஏற்படாது. 

அத்தோடு 10 மணிக்கு மதுபானசாலைகள் மூடப்படுகின்றன. மது அருந்துபவர்கள் எப்படியும் அருந்துவார்கள். 

அவர்களை தடுக்க முடியாது. நாட்டில் மது அருந்துபவர்கள் இல்லையென்றால் அனைத்து மதுபானசாலைகளையும் மூடிவிட்டு நாட்டில் மதுபானம் இல்லையென்று கூறிவிடுவோம். அவ்வாறு நடக்கப்போவதில்லை என அனைவருக்கும் தெரியும்.

ஆகவே நான் ஜனாதிபதியிடமும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். தயவு செய்து மதுபானங்களின் விலையை குறையுங்கள். 

மதுபானங்களை மக்களால் வாங்கி குடிக்க முடியவில்லை. அவர்களிடம் பணமில்லை. இதனால் மக்கள் வீடுகளில் கசிப்பு உற்பத்தி செய்து குடிக்கும் நிலை உருவாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.