மரக்கடை ஒன்றிலே தீ விபத்து - பிலியந்தலை பகுதியில் சம்பவம்

மரக்கடை ஒன்றிலே தீ விபத்து - பிலியந்தலை பகுதியில் சம்பவம்

பிலியந்தலையின் போகுந்தர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – பிலியந்தலை வீதியின் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்புத் துறையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் கூறுகிறது.