விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் மருத்துவமனையில் அனுமதி! (படங்கள்)

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்கள எளிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நால்வரும் பயணித்த வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் ஏனைய மூவரும் கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.