டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகங்களுடன் ஐவரின் உடல்களும் மீட்பு!
டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சுற்றுலா சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சுற்றுலா சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க கடலோர படையினர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான பயணத்தின் போது வெடித்த ஓஷன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து பேர் இருந்தனர்.
இந்த நிலையில், ஜூன் 28 ஆம் திகதி டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் பல மீட்கப்பட்டுள்ளன.
டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக நீருக்கடியில் சென்ற பயணத்தின் போது வெடித்த நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
Update :
டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு அண்மையில் சென்றிருந்தது.
வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.
நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை ஆரம்பித்தது.
இந்தநிலையில், 5 பேரை பலி கொண்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் அட்லாண்டிக் கடலின் ஆழமான பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
அவை கனடாவின் ஆர்டிக் ஹாரிசான் கப்பல் மூலம் செயின்ட் ஜான்ஸ் நியூபவுண்ட் லேண்ட் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டன.
அட்லாண்டிக் கடலில் ஆயிரத்து 600 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட சிதைந்த பாகங்களை அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன் முடிவில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நீர்மூழ்கிக் கப்பல் ஏன் வெடித்தது என்பதற்கான விசாரணையின் முக்கிய பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.