மொரோக்கோ நிலநடுக்கம் -உயிரிழப்பு எண்ணிக்கை 800ஐ கடந்தது!
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 820ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 820ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இதனால் காயமடைந்தோர் எண்ணிக்கை 672ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் இன்று அதிகாலை 6.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
அங்கு சுமார் 10 நிமிடங்கள் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோவின் உள்ள ஆறு மாகாணங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மொரோக்கோவின் பழைய வரலாற்று கட்டடங்களும் இதன்போது இடிந்து வீழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.