இன்ஸ்டாகிராமிக்கு தடை விதித்த மத்திய கிழக்கு நாடு!

இன்ஸ்டாகிராமிக்கு தடை விதித்த மத்திய கிழக்கு நாடு!

சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை (Instagram) மத்திய கிழக்கு நாடான துருக்கி தடை செய்துள்ளதாக அந்நாட்டு தேசிய தகவல் தொடர்பு ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஓகஸ்ட் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட உத்தரவில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால், இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உத்தரவைத் தொடர்ந்து, துருக்கியில் உள்ள பலர் எக்ஸ் தளத்தில் இன்ஸ்டாகிராம் feed ஏற்றப்படவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளனர்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மரணம் குறித்து மக்கள் வேடிக்கையான செய்திகளை வெளியிடுவதை இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா (Meta)தடுத்ததாக, துருக்கியின் ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபஹ்ரெட்டின் அல்டன் குற்றம் சாட்டினார்.

இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ஹனியே துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியில் இன்ஸ்டாகிராமில் விதிக்கப்பட்டுள்ள தடையால் 5 கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடி அத்தகைய சூழ்நிலையில், துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.