புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்பரிசீலனை இன்று முதல்!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்டன.
அதன்படி, இன்று (27) முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் இணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.