ஏப்ரலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் - பிமல் ரத்நாயக்க!
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் இரண்டாவது வாரத்திலோ அல்லது 4வது வாரத்திலோ நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்யும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.