தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.