திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோமரங்கடவெல பகுதியில் துவிச்சக்கர வண்டியில் தந்தையும் மகனும் பயணித்திருந்த நிலையில் மகன் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் குறித்த தந்தை அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

யானை தாக்குதலில் சிறுவன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கீழே வீழ்ந்துள்ளார்.

பிரதேச மக்கள் சிறுவனை கோமரங்கடவல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த போதிலும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.