தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள்!

இன்று காலை(04) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் , உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06ஆம் திகதி 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 06ஆம் திகதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகவுள்ளதுடன் பிற்றபகல் 4 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025 உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, பெவ்ரல் அமைப்பு சுமார் 3,000 பார்வையாளர்களை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன. எனவே தேர்தல் நடைபெறும் திகதி வரையில் இந்த காலப்பகுதி அமையான காலப்பகுதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.