அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தங்காலை பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது.

சமகி ஜன பலவேகய 1,397 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் 5 இடங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கை பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்று பிரதேச சபையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

சர்வஜன பலய 177 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் ஒரு இடத்தையும் பெற்றுள்ளது.