சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பாதுகாப்புதுறை கண்காணிப்புக் குழு!

சிறி லங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு துறைசார் கண்காணிப்புக் குழு, நேற்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கண்காணிப்புக் குழுவின் அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என அரசாங்கம் கருதுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“குறிப்பாக, நாட்டில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்களினால், தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

தகவல் மற்றும் தொடர்பாடல் துறை தொடர்பான நிதித் தரவுகள், இந்த துறை தொடர்பில், இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு என்பன அவசியமாகும்.

மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன்படி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது” எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.