தான் தாக்கப்பட்டதாக கூறும் டயனா கமகே - பரபரப்பு காணொளி!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை உடனடியாக ஒத்திவைக்குமாறு பிரதமர் தினேஷ் விடுத்த கோரிக்கைக்கு அமைய சபை அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்,
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான இந்த குழுவில் எம்.பிக்களான சமல் ராஜபக்ச , ரமேஷ் பத்திரண, கயந்த கருணாதிலக்க , இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் இதர உறுப்பினர்களாவர்.
இந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் மேலும் அறிவித்தார்.