விலகிச் செல்லும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் - சம்பந்தன் சந்திப்பு!
இலங்கையில் தமது பணிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் எப்பிள்டன் இன்று (27) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.
இலங்கையில் தமது பணிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் எப்பிள்டன் இன்று (27) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பல கரிசனைக்குரிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதாக உயர்ஸ்தானிகர் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமூக ஒற்றுமை மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நியூசிலாந்தும் இலங்கையும் கடைப்பிடித்த அணுகுமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் தாம் இருவரும் விவாதித்ததாக எப்பிள்டன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகராக எப்பிள்டன் தனது பதவிக்காலத்தை ஜனவரி முதல் வாரத்துடன் நிறைவு செய்யவுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர் நியூசிலாந்து திரும்பவுள்ளார்.
அங்கு அவர் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் மூத்த வெளியுறவு ஆலோசகராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
000000000000000000