இலங்கையில் மின்சாரக் கட்டணம் திடீர் அதிகரிப்பு!
இலங்கையில் இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலையான கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரித்துள்ளது.
31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 25 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அலகுகளுக்கான நிலையான கட்டணமானது 300 ரூபாவில் இருந்து 360 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.