இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

காற்று:

காற்று வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கி.மீ.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவுக்கு காணப்படும்.