வத்திராயனில் தந்தை மகன் உட்பட மூவர் மீது வாள்வெட்டு

சற்றுமுன் யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கல், கம்பிகளால் தாக்கி வாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று(19) மாலை 03.00 மணி அளவில் யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் தந்தை, மகன், மனைவி அவர்களுடைய மகன் என நால்வர் மீது நடாத்தப்பட்டுள்ளது 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து வாகனம் 

(NP CAH - 0636) மற்றும் வாள்கள், கம்பிகளுடன் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து வாளால் வெட்டுவதற்கு முயச்சித்ததோடு கல், கம்பிகளால் கொடூரமாக தாக்கி உள்ளார் சகோதரனின் மனைவியை கைகளால் வன்மையாக தாக்தியதாகவும் தெரியவருகின்றது

குறித்த குழுவுடன் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உடன் இருந்ததாகவும் வாள் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.