சாந்தனின் உடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்...உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம்!

சாந்தனின் உடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்...உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம்!

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பிதேர பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் உடலை உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம்!

சாந்தனின் உடலை உறவினர்களிடம் கையளிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சாந்தனின் உடல் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், இலங்கையில் வைத்து சாந்தனின் உடல்  மீள் பிரேத பரிசோதனை செய்யும் பொருட்டு நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. 

இந்தநிலையில், சாந்தனின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி நீதிபதியின் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு அமைய அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு நீர்கொழும்பு நீதவான் இன்று காலை  வரை (10.00 AM) சமூகமளிக்கவில்லை எனவும் அவர் வருகையின் பின்னரே பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, தற்போது சாந்தனின் உடலை கையளிப்பதில் இழுபறி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், இன்று மாலையளவில் பிரேத பரிசோதனைகள் முடிந்து சாந்தனின் உடல் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அங்கு மக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

பிரேத பரிசோதனைகளின் ஏற்பட்ட தாமதம் காரணமாக சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.