இன்று புனித வியாழன் சிறப்பு திருப்பலி

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஈஸ்டர் பெருவிழா.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுவார்கள்
7 புனித வாரங்களில் வியாழக்கிழமையான இன்று புனித வியாழன் ஆக கடைப்பிடிக்கப்படுகின்றது
இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நாளான இன்று இயேசு கிறிஸ்து 12 சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆலயத்திலும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தையர்கள் 12 பேரின் பாதங்களை கழுவி, நற்கருணை ஆராதனையோடு வழிபாட்டினை நிறைவு செய்வார்கள்.